Published : 01 Dec 2014 09:50 AM
Last Updated : 01 Dec 2014 09:50 AM

விளையாட்டுச் செய்தித் துளிகள்

›› கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் சென்னை அணி ஏறக்குறைய அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

›› கோவா மாநிலம் பட்ரோடாவில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதுகின்றன.

›› சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ரேச்சல் பரஞ்சோதி நினைவு மகளிர் செஸ் போட்டியில் சென்னை எம்.ஓ.பி. கல்லூரி மாணவி பால கண்ணம்மா 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். முதல் 6 சுற்றுகளில் வெற்றி பெற்ற பால கண்ணம்மா, அடுத்த 3 சுற்றுகளில் டிரா செய்தார்.

›› சென்னை கால்பந்து சங்கம் சார்பில் நடைபெற்று வரும் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் சத்யபாமா பல்கலை., ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, தியாகராய கல்லூரி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. விவேகானந்தா கல்லூரி-பாரதியார் பல்கலை. இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

›› மாட்ரிட்டில் நடைபெற்ற ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் அனைத்துவிதமான லீக் போட்டிகளிலும் சேர்த்து தொடர்ச்சியாக 16-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது மாட்ரிட் அணி.

›› பிலிப் ஹியூஸ் மரணத்தின் எதிரொலியாக பவுன்சருக்கு தடை விதிப்பது குறித்து கிரிக்கெட் வாரிய தலைவர்கள் சிந்திக்கக்கூடாது. அதற்குப் பதிலாக வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x