புவனேஷ் குமார் இடத்தை நிரப்ப வருகிறார் தவால் குல்கர்னி

புவனேஷ் குமார் இடத்தை நிரப்ப வருகிறார் தவால் குல்கர்னி
Updated on
1 min read

கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது போயுள்ள புவனேஷ் குமாருக்கு பதிலாக மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி இந்திய அணியில் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிலிருந்து விலகிய புவனேஷ் குமாருக்கு ஏற்பட்டுள்ள காயம் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு குணமாக வாய்ப்புகள் குறைவு என்பதால் தவால் குல்கர்னி மாற்று வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை இந்தியாவுக்காக 4 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடியுள்ளார் தவால் குல்கர்னி.

ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அதிர்ச்சித் தோல்வி அடைந்த போட்டியில் 104 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றிய தவால் குல்கர்னிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிளென் மெக்ரா விதந்தோதிய ஈஸ்வர் பாண்டே அல்லது இங்கிலாந்தில் அபாரமாக வீசி விக்கெட்டுகள் விழாத பங்கஜ் சிங்கிற்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்ற கருத்துகள் ஊடகங்களில் எழத் தொடங்கியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in