சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிச்சுற்றில் நுழைவது யார்? - இந்தியா-பாக். இன்று பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிச்சுற்றில் நுழைவது யார்? - இந்தியா-பாக். இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

பரமவைரிகளான இந்த இரு அணிகளுமே தங்களின் கவுரவத்தை நிலை நாட்டுவதற்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, அதற்குப் பதிலடி கொடுக்க இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். இந்திய அணியின் தற்போதைய பார்ம் மற்றும் சமீபத்திய புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால் இந்திய அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ளது.

காலிறுதியில் பெல்ஜியம், அதற்கு முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்து என இரு பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய இந்திய அணி, இந்த ஆட்டத்திலும் அபாரமாக ஆடும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளூர் ரசிகர்களின் முன்னி லையில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றில் 3 ஆட்டங் களிலும் தோற்ற நிலையில், காலிறுதியில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி யுள்ளது.

அதனால் அந்த அணி நம்பிக் கையோடு இந்தியாவை எதிர் கொள்ளும் என எதிர்பார்க் கப்படுகிறது. மொத்தத்தில் இரு நாட்டு ரசிகர்களுக்கும் இந்தப் போட்டி நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டி நேரம்: இரவு 7.30
நேரடி ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ்

ஆஸ்திரேலியா, ஜெர்மனி மோதல்

மற்றொரு அரையிறுதியில் நடப்பு உலக மற்றும் சாம்பியன்ஸ் டிராபி சாம்பியனான ஆஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in