பவுலிங் ஆய்வுக்காக சென்னை வருகிறார் ஹபீஸ்

பவுலிங் ஆய்வுக்காக சென்னை வருகிறார் ஹபீஸ்
Updated on
1 min read

சென்னையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பந்துவீச்சு மையத்தில் தனது பந்துவீசும் முறையை ஆய்வு செய்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் வரும் 25-ம் தேதி சென்னை வருகிறார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஷகில் ஷேக் கூறுகையில், “வரும் 25-ம் தேதி ஹபீஸ் சென்னை செல்கிறார். எனினும் அவர் அதிகாரப்பூர்வமான சோதனைக்காக செல்கிறாரா, இல்லை அதிகாரப்பூர்வமற்ற சோதனைக்காக செல்கிறாரா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை” என்றார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஹபீஸின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச அவருக்கு தடை விதிக்கப் பட்டது. இதையடுத்து தனது பந்துவீசும் முறையை சரி செய்து உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தீவிரம் காட்டி வருகிறார் ஹபீஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in