ஐஎஸ்எல் கால்பந்து - இந்தியா உலகக்கோப்பைக்கு தகுதிபெறும்: ஹன்ஸ் முல்டர்

ஐஎஸ்எல் கால்பந்து - இந்தியா உலகக்கோப்பைக்கு தகுதிபெறும்: ஹன்ஸ் முல்டர்
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் வெற்றியால், கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய அணி இடம்பெற வாய்ப்புள்ளது என்று டெல்லி டைனமோஸ் அணியின் கேப்டன் ஹன்ஸ் முல்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக ஹன்ஸ் முல்டர் கூறியபோது: “எதுவுமே சாத்தியம். இந்திய அணி, கால்பந்து உலகக்கோப்பையில் பங்குபெற அதிகம் வாய்ப்புள்ளது. அடுத்த சில வருடங்களுக்கு இந்தியன் சூப்பர் லீக் போட்டியை நன்றாக நடத்தினால் அது நிச்சயம் இந்திய கால்பந்துக்கு உதவும்.

ஆரம்பத்தில், எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால், இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். கடுமையாக உழைத்து சரியான வழியில் செல்கிறார்கள். இவர்கள் 2-3 மாதங்களில் வளர்ச்சி காணும்போது அடுத்த சில வருடங்கள் கழித்து இந்திய கால்பந்தின் வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்’’ என்றார்.

அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ள அணிகளில் டெல்லி அணியும் ஒன்று. இதுகுறித்து ஹன்ஸ் முல்டர் கூறும்போது: “ஆரம் பத்தில் டெல்லி அணி மோசமாக ஆடினாலும் பிறகு சிறப்பாக ஆடி வருகிறது. அடுத்த சில ஆட்டங் களில் நன்றாக ஆடினால் டெல்லி அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். டெல்லி அணியில் விளையாடும் இந்திய வீரர் அன்வர் அலி திறமையுடன் விளையாடுகிறார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in