Last Updated : 06 Dec, 2014 02:46 PM

 

Published : 06 Dec 2014 02:46 PM
Last Updated : 06 Dec 2014 02:46 PM

அடிலெய்ட் டெஸ்டின் முதல் பந்து பவுன்சராக இருக்க வேண்டும்: பாண்டிங் விருப்பம்

பிலிப் ஹியூஸின் அகால மரணத்தினால் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ள ஒருவகை கசப்புணர்வுக்கு மருந்து டெஸ்ட் போட்டியின் முதல் பந்து பவுன்சர்தான் என்கிறார் ரிக்கி பாண்டிங்.

'தி ஆஸ்திரேலியன்’ என்ற செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

"செவ்வாய்க்கிழமை அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் பந்து பவுன்சராக இருக்க ஆசைப்படுகிறேன். இது கசப்புணர்வை அகற்றும். ஆட்டம் தொடங்கியது என்று அறிவிப்பது போல் அமையும். அப்படி அமைந்தால் அனைவருக்கும் அது ஒரு குணப்படுத்தும் முயற்சியாக இருக்கும், குறைந்தது குணப்படுத்துதலை தொடங்கவாவது செய்யும்.

இதற்கு முன்பாக வீரர்களுக்கு ஏற்பட்ட எந்த ஒரு உணர்வும், பிலிப் மரணத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் மனநிலையுடன் ஒப்பிட முடியாதது.

இது வரை பயணம் செய்யாத நீரில் அவர்கள் நீந்த வேண்டும். அதாவது இதுவரை நீந்தாத அளவுக்கு ஆழமாக நீந்துவது அவசியம்.

மிகப்பெரிய மனப்போராட்டத்தை வீரர்கள் சந்தித்துள்ளனர். ஆனால் இதிலிருந்து மீண்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரையும் போல் கிரிக்கெட் வீரர்களும் பணியில் ஈடுபட்டு கடினமான கட்டத்தை கடக்க வேண்டும்.” என்று அந்த பத்தியில் கூறியுள்ளார் பாண்டிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x