Published : 16 Dec 2014 12:50 PM
Last Updated : 16 Dec 2014 12:50 PM

ஐஎஸ்எல்: வாழ்வா, சாவா ஆட்டத்தில் கேரளாவை சந்திக்கிறது சென்னை

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தின் 2-வது சுற்று (2-வது லெக்) ஆட்டம் சென்னை நேரு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

கொச்சியில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையை தோற்கடித்த கேரள அணி தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் சென்னை அணிக்கோ இந்த ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டமாகும்.

லீக் சுற்றின் இரு ஆட்டங்களிலும் கேரளத்தை வீழ்த்தியதோடு, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்த சென்னை அணி, அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் கேரளத்திடம் படுதோல்வி கண்ட தால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் 4 கோல் வித்தியாசத்தில் கேரளத்தைத் தோற்கடிக்க வேண்டும். கடந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய கேரள அணியை, 4 கோல் வித்தியாசத்தில் தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல.

இல்லையெனில் 4-1 என்ற கோல்கணக்கில் சென்னை வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறும்பட்சத்தில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, தலா 4 கோல்களுடன் சமநிலையில் இருக்கும். அப்போது வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்படும். கூடுதல் நேரத்தின் முடிவிலும் சமநிலை ஏற்பட்டால், பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்படும். அதில் வெற்றி பெறும்பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். மொத்தத்தில் சென்னை அணிக்கு இது மிகமிக கடினமான ஆட்டமாகும்.

கடந்த சுற்றில் அபார வெற்றி கண்ட கேரள அணி, இன்றைய ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு சென்னை அணியை எதிர் கொள்ளும். முதல் சுற்று ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றிருப்பதால் இந்த ஆட்டத்தில் தடுப்பாட்டம் ஆடி சென்னை அணியை கோலடிக் காமல் பார்த்துக் கொண்டாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட லாம் என்பதால் கேரள அணி எவ்வித நெருக்கடியும் இன்றி விளை யாடும்.

சென்னை அணியைப் பொறுத்த வரையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது பலம் என்றாலும், இலக்கு மிக கடினமானது என்பதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலானோ, நெஸ்டா, மென்டி போன்ற முன்னணி வீரர்களைக் கொண்டுள்ள சென்னை அணி, மிக அபாரமான ஆட்டத்தை வெளிப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கோல் வாய்ப்பைப் பொறுத்தவரையில் இந்த ஐஎஸ்எல் தொடரில் அதிக கோலடித்தவரான (8 கோல்) இலானோவை நம்பியே சென்னை அணி உள்ளது. இதுதவிர ஜேஜே, பல்வந்த் சிங், மென்டி, தேவதாஸ் உள்ளிட்டோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே சென்னையின் வெற்றி வாய்ப்பு அமையும். மிக முக்கியமான ஆட்டம் என்பதால் சென்னை அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரரான மெட்டாரஸியும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள அணியைப் பொறுத்த வரையில் இயான் ஹியூம், ஐஸ்பாக் அஹமது, உள்ளூர் வீரரான சுஷாந்த், கோல் கீப்பர் நேன்டி, குருவிந்தர் சிங், ஹெங்பர்ட், ஜிங்கான் உள்ளிட் டோர் பலம் சேர்க்கின்றனர்.



போட்டி நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x