Last Updated : 06 Dec, 2014 06:45 PM

 

Published : 06 Dec 2014 06:45 PM
Last Updated : 06 Dec 2014 06:45 PM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சித் தோல்வி

புவனேஷ்வரில் தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகளின் முதல் நாளான இன்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சித் தோல்வி கண்டன.

உலக ஹாக்கி அணிகள் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியன்களான ஆஸ்திரேலியாவை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது.

மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்த்தியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் சாம் வார்ட் என்பவர் 27 மற்றும் 56-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அதிர்ச்சி அளித்தார். ஆட்டம் தொடங்கி 6-வது நிமிடத்திலேயே அலஸ்டைர் புரோக்டன் முதல் கோலை அடித்தார். ஆஸ்திரேலியாவுக்காக கிறிஸ் சிரியெல்லோ 54-வது நிமிடத்தில் ஒரே கோலை அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் டாங்கை கோசின்ஸ் மூலம் முன்னிலை பெற்றது.

2-வது கால்மணி நேர ஆட்டத்தில் கோல்கள் எதுவும் இல்லை. பிறகு பாகிஸ்தான் அணியின் முகமது இம்ரான் 36-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை கோலாக மாற்றினார்.

இதற்கு 7 நிமிடங்களுக்குப் பிறகு பெல்ஜியம் அணியின் தாமஸ் பிரையல்ஸ் ஒரு அபாரமான கோலை அடிக்க அதுவே வெற்றிக்கான கோலாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x