ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகம் அபாரம்

ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகம் அபாரம்
Updated on
1 min read

பெங்களூருவில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், கர்நாடக அணி 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாம் நாளான நேற்று, 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் என்கிற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய தமிழக அணி, விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்ததால் 274 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. எதிர்பாராத விதமாக கடைசி 5 விக்கெட்டுகள் 19 ரன்களுக்கு வீழ்ந்தன. கர்நாடகாவின் எஸ். அரவிந்த் 4 விக்கெட்டுகள் எடுத்தார். கர்நாடகம் முதல் இன்னிங்ஸில் 16 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த கர்நாடகம், அதிரடியாக ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 62 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 80 ரன்கள் குவித்தார். இதனால் கர்நாடகம் 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று போட்டியின் கடைசி நாள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in