Published : 09 Dec 2014 02:54 PM
Last Updated : 09 Dec 2014 02:54 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதம்: முன்னணி வீரர்களுடன் இணைந்த டேவிட் வார்னர்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று வார்னர் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். 33-வது டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் கண்ட 4-வது ஆஸ்திரேலிய வீரராக உள்ளார் வார்னர்.

டான் பிராட்மேன், நீல் ஹார்வி, ஆர்தர் மாரிஸ் ஆகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குப் பிறகு தற்போது 33 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் 10 டெஸ்ட் சதங்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

33 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் 18 சதங்களையும் 7 அரைசதங்களையும் எடுத்திருந்தார். நீல் ஹார்வி 12 சதங்களையும், 11 அரைசதங்களையும், ஆர்தர் மாரிஸ் 10 சதங்களையும் 8 அரைசதங்களையும் எடுக்க, வார்னர் 10 சதங்களையும் 13 அரைசதங்களையும் எடுத்து அந்த உயர்மட்ட பட்டியலில் இணைந்தார்.

33 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள்: மைக் ஹஸ்ஸி, ஹெய்டன், டீன் ஜோன்ஸ், கிரெக் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x