Published : 26 Dec 2014 01:10 PM
Last Updated : 26 Dec 2014 01:10 PM

சென்னை ஓபன் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் இன்று முதல் டிக்கெட்டை பெறலாம்.

ஆன்-லைன் டிக்கெட் விற்பனை வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. >www.bookmyshow.com இணைய தளத்தின் மூலமாக டிக்கெட்டை பெறலாம். சீசன் டிக்கெட்டுகள் ரூ.1,500, ரூ.3,000, ரூ.5,000 ஆகிய விலைகளில் கிடைக்கின்றன.

இது தொடர்பான மேலும் விவரங்களை >www.aircelchennaiopen.org என்ற இணையதளத்தின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். கார்ப்பரேட் மற்றும் மொத்த விற்பனைக் கும் டிக்கெட் கிடைக்கிறது. போட்டி வரும் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடை பெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x