

ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் வர்த்தக ரீதியில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ தாக்கல் செய்தது.
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் வர்த்தக ரீதியில் தொடர்பு வைத்துள்ள வீரர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் பட்டியலை சமர்ப்பிக்கவேண்டும் என்று பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்றைய விசாரணையின்போது, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் என இரண்டிலும் பதவி வகிக்கும் நபர்களின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ தாக்கல் செய்தது. அதில், கவாஸ்கர், கங்குலி, ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.