ஐஎஸ்எல்: இறுதிச்சுற்றில் கொல்கத்தா

ஐஎஸ்எல்: இறுதிச்சுற்றில் கொல்கத்தா
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது அட்லெடிகோ டி கொல்கத்தா. வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் கேரளத்தை சந்திக்கிறது கொல்கத்தா.

கோவா மாநிலம் பட்ரோடாவில் நடந்த அரையிறுதி 2-வது சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் மோதின. இதன் பிறகு முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிய, பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ஸ்டிரைக்கர் லூயிஸுக்குப் பதிலாக ஜோப்ரே களமிறக்கப்பட்டார். இஞ்சுரி நேரத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணி வீணடிக்க, ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொல்கத்தா வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in