

இதுவரை சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றதில்லை என்றாலும் ஒருநாள் நிச்சயம் அப்போட்டியில் சாம்பியனாவேன் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்காவ் ஓபன் போட்டியை வென்ற பி.வி. சிந்து இதுபற்றி கூறும்போது:
ஆண்டின் இறுதியில் மக்காவ் ஓபன் போட்டியை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வருடம் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக விளையாடியுள்ளேன். இதுவரை சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றதில்லை. ஆனால் ஒருநாள் நிச்சயம் அப் போட்டியில் வெற்றி பெறுவேன். சீன வீராங்கனைகள் மட்டுமின்றி ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் நன்றாக ஆடுகிறார்கள். இதனால் கடின பயிற்சி தேவைப்படுகிறது. அடுத்த வருடம் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் கலந்துகொள்வேன் என்றார்.