பிலிப் ஹியூஸிற்கு சச்சின் டெண்டுல்கர் புகழஞ்சலி

பிலிப் ஹியூஸிற்கு சச்சின் டெண்டுல்கர் புகழஞ்சலி
Updated on
1 min read

பிலிப் ஹியூஸ் உடல் இன்று அடக்கம் செய்யப்படுவதை அடுத்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

"வீ மிஸ் யூ ஃபில், கற்றுக்கொள்வதன் மீதான உனது ஆர்வமும், துல்லியத்தின் மீதான வேட்கையும் அபாரமானது. ஃபேர்வெல் ஹியூஸ்” என்று பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்,

இத்துடன் பிலிப் ஹியூஸும் தானும் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2013-ல் பிலிப் ஹியூஸ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார்.

அனில் கும்ளே தனது ட்விட்டரில் “63 நாட் அவுட், கிரிக்கெட் உங்களை இழந்து விட்டது. அமைதியாக ஓய்வெடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in