

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற 64-வது மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை சுங்கத்துறை அணியும், மகளிர் பிரிவில் காஞ்சிபுரம் ஜேப்பியார் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், விருதுநகர் மாவட்ட வாலிபால் சங்கம், ராஜபாளையம் நாடார் இந்து மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 91 அணிகள் பங்கேற்றன.மகளிருக்கான இறுதிப் போட்டியில் காஞ்சிபுரம் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி 25-21, 25-20, 25-11 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.
பின்னர் நடைபெற்ற ஆடவர் இறுதிப் போட்டியில் சென்னை சுங்கத்துறை அணி 31-29, 25-22, 25-22 என்ற கணக்கில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.