மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான்

மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான்
Updated on
1 min read

ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் வீரர்கள் மீது கடும் வசை வார்த்தைகளை பிரயோகித்த ரசிகரை கிரிக்கெட் வீர்ர் யூசுப் பத்தான் 2 அறைவிட்டார்.

பரோடா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மோசமாக நடந்து கொண்ட ரசிகரை யூசுப் பத்தான் ஓய்வறைக்கு அழைத்து 2 முறை அடித்தது பரபரப்பாகியுள்ளது.

வதோதராவில் நடைபெறும் இந்த போட்டியின் போத் யூசுப் பத்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கடுமையான கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். பத்தான் மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பேட்டிங் செய்யும் போதும் அதே ரசிகர் தனது கெட்ட வசைகளை கடுமையாக ஏவியுள்ளார்.

இது குறித்து பரோடா கிரிக்கெட் சங்கச் செயலர் ஸ்னேகல் பரிக் கூறும் போது, “அந்த இளம் ரசிகர் யூசுப் பத்தான் மற்றும் பிற வீரர்கள் மீது அநாகரிகமான முறையில் வசைவார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தார். அம்பாத்தி ராயுடு மீதும் அவர் பாய்ந்தார். பத்தான் அதனை சகித்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை. இதனால் அவுட் ஆன பிறகு யூசுப் பத்தான் அந்த ரசிகரை ஓய்வறைக்கு அழைத்தார். அவரை பத்தான் இரண்டு அறை விட்டதாக கூறப்படுகிறது” என்றார்.

யூசுப் பத்தான் சகோதரர் இர்பான் பத்தான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சமாதானப் படுத்த முயன்றார்.

அதன் பிறகு வசைபாடிய அந்த இளம் வீரரின் குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டதையடுத்து விஷயம் சுமுகமாக முடிந்ததாக முன்னாள் வீரர் அஞ்சுமன் கெய்க்வாட் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பிசிசிஐ-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in