

பிலிப் ஹியூஸுக்காக முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடவேண்டும் என்று அந்த அணியின் அணியின் பயிற்சியாளர் டேரன் லீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிலிப் ஹியூஸின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து ஆஸ்திரேலிய அணியினர் இன்னும் மீளாத நிலையில், டேரன் லீமான் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலிய வீரர்கள் அடிலெய்டில் ஆடவேண்டும் என்று ஹியூஸ் விரும்புவார். அதனால் ஆஸி. வீரர்கள் கிரிக்கெட் ஆடுவதற்கான மனபலத்தை தேடிக்கொள்வார்கள். அடிலெய்ட் டெஸ்டில் கலந்துகொள்வதன் மூலம் பிலிப் ஹியூஸுக்கு மரியாதை செலுத்த முடியும்.
ஹியூஸின் எண்ணங்களை மனதுக்கு நெருக்கமாக வைத்திருக்க விரும்புகிறோம். அவரைப் போல அன்புடனும் புன்னகையுடனும் கிரிக்கெட்டில் பங்குபெற வேண்டும். ஆனால், யாருக்காவது ஆடுவது கடினமாக இருந்தால் அதை நானும் கிளார்க்கும் புரிந்துகொள்வோம். அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படுத்தமாட்டோம். ஆடமுடியாமல் போகிறவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர்களுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்க வழிவகை செய்வோம் என்றார்.