

சென்னை நேரு மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதுகின்றன.
17 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள டெல்லி அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் வென்றாலொழிய அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது. எனினும் கடந்த 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளையும், ஒரு டிராவையும் பதிவு செய்திருப்பது டெல்லி அணிக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைக்க இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். இதுதவிர டெல்லியிடம் அதன் சொந்த மண்ணில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் இந்தப் போட்டி சென்னை அணிக்கு நல்ல வாய்ப்பாகும்.