மும்பை தொடர்ந்து 4-வது தோல்வி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

மும்பை தொடர்ந்து 4-வது தோல்வி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி
Updated on
1 min read

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி டேர்டெவிலிஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இது, தொடர்ந்து மும்பை பெறும் 4-வது தோல்வியாகும்.

மும்பை நிர்ணயித்த 126 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்கள் விஜய் மற்றும் டிகாக், நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க முயற்சித்தனர். 7-வது ஓவரில் டி காக் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிவந்த விஜய், 40 ரன்களுக்கு ரோஹித் சர்மாவின் பந்தில் வீழ்ந்தார்.

டுமினி 19 ரன்களுக்கும், கார்த்திக் 2 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஒரே ஓவரில் ஆட்டமிழக்க 16 ஓவர்களில் டெல்லி 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை எடுத்திருந்தது. களத்திலிருந்து யாதவ் மற்றும் பீட்டர்சன் ஜோடி சிக்கலின்றி 19-வது ஓவரின் முடிவில் வெற்றி இலக்கை தொட்டது. பீட்டர்சன் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாக முரளி விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லியின் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறியது. முக்கியமான வீரர்கள் அனைவரும் 20 ரன்களைக் கூடத் தாண்டாமல் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 100 ரன்களை மும்பை தாண்டுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

பொல்லார்ட் மற்றும் கவுதம் இணை மட்டுமே அணிக்கு நம்பிக்கைச் சேர்த்தது. கவுதம் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொல்லார்ட் 33 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in