

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்கள் இணையதளத்தில் அதிக எண்ணிக்கையில் பார்வையிடப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி 2-வது சுற்றில் சென்னை கேரளா அணிகள் மோதின. இந்தப் போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ்.காம் இணையதளத்தில் 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஐஎஸ்எல் போட்டியின் வீடியோக்கள் அந்த இணையதளத்தில் 1 கோடியே 60 லட்சம் தடவை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல ஐஎஸ்எல் இணையதளத்தின் பார்வையாளர் வருகை, இதுவரை 2 கோடியே 87 லட்சம்.