Published : 30 Dec 2014 08:16 PM
Last Updated : 30 Dec 2014 08:16 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவரங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டை தோனி தனது 24 நாட் அவுட்டுடன் முடித்து கொண்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய சில சுவையான புள்ளி விவரங்கள்:

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் ஒரு கேப்டனாக 10,000 ரன்களை எடுத்துள்ள முதல் இந்திய பேட்ஸ்மென் தோனி. ரிக்கி பாண்டிங் 15,440 ரன்களையும், கிரேம் ஸ்மித் 14,878 ரன்களையும் ஸ்டீபன் பிளெமிங் 11,561 ரன்களையும், ஆலன் பார்டர் 11,062 ரன்களையும் ஒரு கேப்டனாக எடுத்த பேட்ஸ்மென்கள் ஆவர்.

60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஒரு விக்கெட் கீப்பராக இதுவே அதிகமானதாகும், இவருக்கு அடுத்த படியாக முஷ்பிகுர் ரஹிம் 19 போட்டிகளில் விக்கெட் கீப்பர்/கேப்டனாக இருந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுகளை வீழ்த்த தோனி விக்கெட் கீப்பராக பங்களித்துள்ளார். இது விக்கெட் கீப்பர்களில் 5-வது சிறந்த பங்களிப்பாகும். மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட், இயன் ஹீலி, ராட்னி மார்ஷ் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களை தோனி எடுத்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக 3-வது சிறந்த பங்களிப்பாகும். ஆடம் கில்கிறிஸ்ட் 5570 ரன்களையும் மார்க் பவுச்சர் 5,515 ரன்களையும் எடுத்துள்ளனர்.

தோனி 60 டெஸ்ட்களில் கேப்டனாக செயலாற்றி 27 முறை வெற்றி கண்டுள்ளார். இதில் உள்நாட்டில் வென்றது 21. அயல்நாட்டில் 30 டெஸ்ட்களில் தோனியின் கீழ் 6 டெஸ்ட் போட்டிகளில்தான் இந்தியா வென்றுள்ளது. 15 போட்டிகளில் தோற்றுள்ளது. ஆனால் கங்குலி தலைமையில் 28 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு அயல்நாட்டில் தோனி தலைமையில் விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் இந்தியா தோல்வி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் தோனி எடுத்த 224 ரன்கள் ஒரு விக்கெட் கீப்பராக 3-வது பெரிய ஸ்கோராகும். ஜிம்பாவேயின் ஆண்டி பிளவர் 232 ரன்களையும், குமார் சங்கக்காரா 230 ரன்களையும் எடுத்துள்ளனர். தோனி இந்த இரட்டைச் சதம் எடுக்கும் முன்னர் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 192 ரன்கள். இதனை சாதித்தவர் புதி குந்தரென் என்ற இந்திய விக்கெட் கீப்பர். இது 1964 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சாதிக்கப்பட்டது.

ஆசியாவைத் தாண்டி தோனி டெஸ்ட் சதம் எடுத்ததில்லை அவரது அதிகபட்ச ஸ்கோர் ஓவலில் 2007ஆம் ஆண்டு எடுத்த 92 ரன்களே.

டெஸ்ட் கேப்டனாக தோனி 2871 ரன்களை எடுத்துள்ளார். இது இந்திய கேப்டனாக அதிகபட்ச பங்களிப்பு, சுனில் கவாஸ்கர் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 4449 ரன்களை எடுத்துள்ளார். இதே 47 டெஸ்ட்களில் அசாருதீன் 2,856 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் தோனி 78 சிக்சர்களை அடித்துள்ளார். முன்னணியில் இருப்பவர் விரேந்திர சேவாக். இவர் 90 சிக்சர்களை அடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x