

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும் ஸ்டைல் போன்று பாட்டி ஒருவர் பந்துவீச முயன்று ஓடிவரும் வீடியோவைப் பார்த்து பும்ரா வியந்துள்ளார்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா உலகக்கோப்பைப் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்னமாகத் திகழ்ந்தார். பும்ராவின் வித்தியாசமான ஸ்டைல், பந்தை பிடித்து கையை அசைத்து வீசும் முறை ஆகியவை மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக்காட்டியது. உலகக்கோப்பைப் போட்டியில் பும்ரா 18 விக்கெட்டுகளை வீழ்த்தியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா பந்துவீசுவதுபோன்று கேப்டன் விராட் கோலி கூட பந்துவீச முயன்ற வீடியோ வெளியானது. இப்போது, ஒரு பாட்டி ஒருவர் பும்ரா பந்தை பிடித்து பந்துவீசுவது ஓடிவரும் வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த பும்ரா அதை ஷேர் செய்து பாராட்டியுள்ளார்.
சாந்தா சக்குபாய் என்பவர் ட்விட்டரில் ஷேர் செய்த வீடியோவில் " உலகக் கோப்பைப் போட்டியில் பும்ரா பந்துவீசும் முறையை இந்த தாய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால், பும்ரா போன்று பந்துவீச முயன்றார்" எனத் தெரிவித்து அதை பதிவிட்டுள்ளார்.