இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு புதிய நிற சீருடையே காரணம்: மெகபூபா முப்தி

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு புதிய நிற சீருடையே காரணம்: மெகபூபா முப்தி
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய சீருடையே காரணம் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

எட்ஜ்பாஸ்டனில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. இந்த போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்தியஅணி முதல் தோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின்(1992) இந்திய அணியை உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி. ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 8போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது. அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனாலும், நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு இருக்கிறது.

அதேபோல பாகிஸ்தான் அணியும் 4 வெற்றி, 9 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், வங்கதேசத்துக்கு  எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘‘இங்கிலாந்திடம் இந்தியா மோசமான தோல்வியடைய வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் எண்ணி இருக்கலாம். கிரிக்கெட் அவர்களை

இப்படி கூறுவதால் நான் மூடநம்பிக்கை உடையவள் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளுங்கள்.

ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சி (சீருடை) தான்’’ என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்தை கிண்டல் செய்து நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in