Published : 03 Jul 2019 09:28 AM
Last Updated : 03 Jul 2019 09:28 AM

ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரோஹித் சர்மா... அனைவரும் அபாரம்.. ரசிகர்கள் ‘அடேங்கப்பா’ - விராட் கோலி பிரமிப்பு

பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 40வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

 

2015 உலகக்கோப்பையிலும் வ.தேசத்துக்கு ரோஹித் சர்மாதான் ஆப்பு வைத்தார், இந்த முறையும் ரோஹித் சர்மா அதே ஆப்பை மீண்டும் வைத்தார். கடந்த முறை கேட்ச் எடுத்தும் நோ-பால் ஆனது, நடுவர் தீர்ப்பு எவ்வளவு புனிதம் என்று தெரியாமல் வங்கதேச அணியினர் தப்பும் தவறுமாக ரோஹித் சர்மாவையும் இந்திய அணியையும் அப்போது கடுமையாக விமர்சித்தனர்.  அது ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அல்ல இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் என்று அபாண்ட கேலி பேசினர்.

 

ஆனால் இம்முறை ரோஹித் சர்மா 9 ரன்களில் இருந்த போது தமிம் இக்பால் கேட்சையே விட்டார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் கடந்த முறை நடுவர் நோ-பால் கொடுத்ததற்கு ரோஹித் சர்மா நாட் அவுட்டை அபாண்டமாக அவுட் என்று கருதி  இந்திய அணியைத் தூற்றியது வங்கதேசம், ஆனால் இம்முறை கேட்சையே விட்டார் தமிம் இக்பால். இதனால் ரோஹித் சர்மா சதம் எடுக்க கடைசியில் தோனி இழுத்துப் பிடித்துக் கடினமான பிட்சில் இந்திய அணி 300 ரன்களுக்கும் குறைவாக முடிந்து விடாமல் கவனத்துடன் நிதானமாகவும் சமயோசிதமாகவும் ஆடி இந்திய அணி 314 ரன்கள் எடுப்பதை உறுதி செய்தார்.

 

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி இந்திய அணியின் கிடுக்கிப் பிடி பந்து வீச்சில் 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சைபுதின் 38 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களையே எடுக்க முடிந்தது. அவர் நாட் அவுட், காரணம் எதிர்முனை வீரர்களை பும்ரா காலி செய்தார். ஒருவேளை யாராவது ஸ்டாண்ட் கொடுத்திருந்தாலும் 2 ஓவர்களில் மீதமுள்ள ரன்களை அடித்து 315  ரன்கள் வெற்றி இலக்கை வங்கதேசம் எட்டியிருக்கலாம் என்று நினைக்கலாம்,  ஆனால் அது நடக்காது...  காரணம் இந்திய அணியின் பந்து வீச்சுதான்.

 

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

 

வங்கதேச அணியினர் இந்தத் தொடரில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி பந்து வரை அவர்கள் முனைப்புடன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் "Q" அதாவது குவாலிஃபைடு என்று இருப்பது அரைஇறுதிக்குச் செல்லும் முன் எங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க உத்வேகம் அளிக்கும்.

 

ஹர்திக் பாண்டியாவுக்கு அழுத்தம் ஏற்பட்டால் அவர் பெரும்பாலும் நன்றாக அதிலிருந்து மீண்டு வருகிறார், அணிக்காக பங்களிப்பு செய்வதில் முனைப்பாக இருக்கிறார். பேட்ஸ்மென் என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றிய உள்ளுணர்வு ஒரு பவுலராக பாண்டியாவிடம் உள்ளது.  5 பவுலர்கள் ஒரு கேம்பிள்தான், ஆனால் மைதானத்தின் பரிமாணங்களும் உள்ளன.

 

பவுண்டரி தூரம் குறைவாக இருப்பதால் மிகச்சரியான சேர்க்கையை விரும்பினோம். ரோஹித்தை பொறுத்தவரை அவரை தொடர்ந்து பல ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன், இப்போது இருப்பதிலேயே சிறந்த ஒருநாள் வீரர் அவர்தான். அவர் ஆடுவதைப் பார்ப்பதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. அவர் இந்த மாதிரி பந்துகளை அடித்து ஆடும் போது அனைவருமே அவரது ஆட்டத்தை பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்து வருகிறோம்.

 

ஆம் பும்ரா மிகவும் முக்கியம், அவரது ஓவர்களின் முக்கியத்துவத்தை அறிந்துதான் 4 ஓவர்களுடன் நிறுத்தி பிற்பாடு வீச அழைத்தோம். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர் எதற்கு எதிராக நாம் நிற்கிறோம் என்பதை நன்கு அறிந்தவர்.

 

கூடுதலாஅக் 30 ரன்களை எடுக்க வேண்டிய தருணங்களைப் பயன்படுத்தவே காத்திருக்கிறோம். இதுவரை அணி விளையாடியதில் மிக்க மகிழ்ச்சி.  ரசிகர்கள்! அடேங்கப்பா! பெரிய ஆதரவு அவர்களுக்கு நன்றி.

 

இவ்வாறு கூறினார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x