

தோனி பிறந்தநாளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர் தோனி. இந்திய அணிக்காக 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று கொடுத்த பெருமைக்குரியவர் தோனி.
தோனிக்கு இன்று தனது 38-வது பிறந்தநாள் கொண்டாடுவதையடுத்து, அவருக்கு அவரின் ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ வாரியம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சென்னை ரசிகர்கள் ‘தல தல’ என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி பிறந்தநாளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் #தல என் நண்பா’ என தோனிக்கு தமிழில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் " நான் உலகக் கோப்பைகள், நான்கு விதமான தோற்றம், எதை நீங்கள் விரும்புகிறார்கள். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்துள்ளது.
ஐசிசி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் " ஒரு மனிதர் கோடிக்கணக்கான பாராட்டுகள், வாழ்க்கை முழுவதும் நினைவுகள், தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் " எனத் தெரிவித்துள்ளார்.