Last Updated : 09 Jul, 2019 04:07 PM

 

Published : 09 Jul 2019 04:07 PM
Last Updated : 09 Jul 2019 04:07 PM

தோனி, கோலி, கோப்பையை 3வது முறையாக தாயகத்துக்கு கொண்டு வருவார்கள்: தோனி படித்த பள்ளி மாணவர்கள் உற்சாகம்

உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி வந்ததையடுத்து கோப்பையை வென்று இந்திய அணி 3வது முறையாக உலக சாம்பியன்களாகும் என்ற ஆர்வம் நாடு முழுதும் தலைதூக்கியுள்ளது.

 

குறிப்பாக தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அவர் படித்த ஜவஹ வித்யா மந்திரின் இப்போதைய மாணவர்கள் தங்கள் ஆளுமை அரையிறுதியில் எப்படி ஆடப்போகிறார் என்பதைக் காண ஆவலுடன் மேட்சைப் பார்த்து வருகின்றனர்.

 

9ம் வகுப்பு மாணவர் சவ்ரவ் குமார் கூறும்போது, “அரையிறுதிப் போட்டியைக் காண அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம், எங்கள் வீட்டில் நண்பர்கள் நாங்கள் கூடி மேட்ச் பார்த்து வருகிறோம். தோனி பேட் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றார்.

 

இவரது கருத்தை எதிரொலித்த 8ம் வகுப்பு மாணவன் கவல்ஜீத் சிங், “தோனியும், கோலியும் மேஜிக் நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், கோப்பையை 3வது முறையாக தாய்நாட்டுக்கு எடுத்து வருவார்கள் என்று நம்புகிறோம், நான் ‘மாஹி’க்குப் பிறகு கோலியின் மிகப்பெரிய விசிறி.

 

ஆனால் அங்கு விடுதிகளில் பெரிய திரைகளில் மேட்சைக் காட்ட பிசிசிஐ தடை இருப்பதால் விடுதிகளில் எந்த ஒரு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. என்று ரேடிசன் புளூ விடுதி நிர்வாகிகள் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x