30 நிமிட மோசமான கிரிக்கெட்டால் உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது: ரோஹித் வேதனை

30 நிமிட மோசமான கிரிக்கெட்டால் உலகக் கோப்பை  வாய்ப்பு பறிபோனது: ரோஹித் வேதனை
Updated on
1 min read

30 நிமிடங்கள்  நாங்கள் விளையாடிய மோசமான கிரிக்கெட்டால் உலகக் கோப்பை பெறும் வாய்ப்பை எங்களிடமிருந்து பறித்துவிட்டது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் லீக் ஆட்டங்களில் 5 சதம் அடித்த ரோஹித் சர்மா, 6 அரைசதங்கள் அடித்த விராட் கோலி, ராகுல் ஆகியோர் ஒற்றை ரன்னில் ஆட்டமிழந்தனர்.

தோனியும், ரவிந்திரஜடேஜாவும் சேர்ந்துதான் சிறப்பான இன்னிங்ஸை அளித்தார்கள். ஆனாலும் கடைசியில் தோனியும்(50), ஜடேஜாவும்(77) ஆட்டமிழந்தபின் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

” ஒரு அணியாக  நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டோம். கடந்த ஆட்டதில் முதல் 30 நிமிடம் நாங்கள் விளையாடிய மோசமான ஆட்டம்  உலகக் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

எனது இதயம் கனமாக இருக்கிறது.. உங்களுடைய இதயமும் கனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் எங்களுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு அற்புதமானது. எல்லோருக்கும் நன்றி “ என்று பதிவிட்டுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தைத் தவிர்த்து ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  5 சதங்களுடன் 9 ஆட்டங்களில் 648 ரன் குவிந்திருந்தார் .

இந்த நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தது மிகப் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in