முதலில் அரையிறுதிக்குத் தேர்வாகுங்கள்: பீட்டர்சனுக்கு யுவராஜ் அளித்த பதிலடி

முதலில் அரையிறுதிக்குத் தேர்வாகுங்கள்: பீட்டர்சனுக்கு யுவராஜ் அளித்த பதிலடி
Updated on
1 min read

முதலில் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்குத் தேர்வாகுங்கள் என்று யுவராஜ்,  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுக்குப் பதிலடி அளித்துள்ளார்.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 40-வது ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் சிறப்பான சதம், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரது பந்துவீசசால் 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதில் இந்த உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ரன்களைக் குவித்து வரும் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ரோஹித்தின் சிறப்பான ஆட்டம் குறித்து யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரோஹித் இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறீரகள். சிறப்பாக விளையாடினீர்கள் சாம்பியன்” என்று பாராட்டு தெரிவித்தார்.

இதற்கு, ”இங்கிலாந்து அணி  உலகக்கோப்பையை வென்றால் இது நடக்காது” என்று  அந்த அணியின் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பதிவிட்டார்.

இதற்கு யுவராஜ் சிங், ”முதலில் இங்கிலாந்து உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தேர்வாகட்டும்.. அதுமட்டுமில்லாமல் நான்  தொடர் நாயகன் விருதை பற்றிக் கூறி இருக்கிறேன்... வெற்றியைப் பற்றி அல்ல”என்று பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in