Published : 05 Jul 2019 08:15 AM
Last Updated : 05 Jul 2019 08:15 AM

விம்பிள்டன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஆஷ்ரே பார்தி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தி 3-வது சுற்றுக்கு முன்னேறி னார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்தி, 58-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் அலிசன் வான் யுட்வாங்கை எதிர்த்து விளையாடினார். 55 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஷ்லே பார்தி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் ஆஷ்லே பார்தி, 182-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஹாரியட் டார்ட்டை எதிர்கொள்கிறார்.

9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபென்ஸ் 6-0, 6-2 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் யாஃபானையும், 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 48-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கிறிஸ்டினா மிலடெனோவிச்சையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 15 வயதான அமெரிக்காவின் கோரி காஃப் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் சுலோவேக்கியாவின் மெக்டலினா ரைபரிகோவாவை வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தார். உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ் கோவா, ருமேனியாவின் சிமோனா ஹாலப், பெல்லாரசின் விக் டோரியா அசரன்கா, டென்மார்க் கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 11-வது முறையாக 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-4, 6-7 (5-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜன்கோ டிப்சார்விச்சையும், 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மேத்வதேவ் 6-7 (6-8), 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக் கில் ஆஸ்திரேலியாவின் பாப்ரினை யும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந் தனர்.

அதேவேளையில் 22-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை 7-5, 3-6, 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் 63-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா. கனடாவின் மிலோஸ் ரயோனிச், ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட், பிரான்சின் பெனோயிட் பேர் ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறி னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x