Published : 06 Jul 2019 11:15 AM
Last Updated : 06 Jul 2019 11:15 AM

கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு எப்போது?- மவுனம் கலைத்தார் தோனி

உலகக்கோப்பைப் போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக செய்திகள் வலம் வரும் நிலையில், அது குறித்து தோனி மவுனம் கலைத்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியதில் இருந்து தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தோனியின் வழக்கமான "பினிஷிங் டச் இல்லை", "அதிரடி இல்லை" என்ற குற்றச்சாட்டுகள் வர்ணனையாளர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆதங்கமாக வெளிப்பட்டன.

இது ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் சச்சின், கங்குலி போன்ற மூத்த வீரர்கள் குற்றச்சாட்டு வைக்கும் அளவுக்கு தோனி மோசமாக பேட்டிங் செய்தார். ரசிகர்களில் ஒருதரப்பினரும் தோனியின் பேட்டிங்கை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த சூழலில்தான் பிடிஐ நிறுவனத்துக்கு பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் பேட்டி அளித்தார்.அதில் " உலகக் கோப்பைப் போட்டி முடிந்தவுடன் தோனி ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளது. தோனி எப்போதும் எதிர்பாராமல் முடிவுகளை எடுக்கக்கூடியவர். டெஸ்ட் கேப்டன்ஷிப், ஒருநாள், டி20 கேப்டன் பதவியையும் அதுபோலத்தான் திடீரென உதறி முடிவெடுத்தார். ஆதலால், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோனி உலகக்கோப்பைப் போட்டி முடிந்த பின் அறிவிக்கலாம். இதுதான் அவருக்கான கடைசி உலகக்கோப்பைப் போட்டியாக இருக்கும் "எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சமூக ஊடகங்களில் சிலர் , இலங்கை அணிக்கு எதிராக இன்று ஹெடிங்லியில் நடக்கும் போட்டியுடன் தோனி ஓய்வு அறிவிப்பார் என்று பரப்பிவிட்டனர். ஆனால், தோனிக்கு ஆதரவாக கேப்டன் கோலியும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றுக்கு தோனி அளித்த பேட்டியில், " நான் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் ஏதும் இல்லை. ஆனால், ஆனால் ஏராளமானோர் நான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற விரும்புகிறார்கள். ஆனால், நான் எப்போது ஓய்வு பெறுவேன் என எனக்குத் தெரியாது " என தோனி தெரிவித்துள்ளர்

அதேசமயம், தோனி தன்னுடைய ஓய்வு குறித்து இதுவரை அணி நிர்வாகத்திடோமோ, நிர்வாகிகளிடமோ, பயிற்சியாளர்களிடமோ நான் பேசவில்லை எனவும் தோனி  தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x