Last Updated : 13 Jul, 2019 01:26 PM

 

Published : 13 Jul 2019 01:26 PM
Last Updated : 13 Jul 2019 01:26 PM

நீங்கள் இல்லாமல் தெ. ஆப்பிரிக்காவுக்கு வெற்றியே இல்லை: டிவில்லியர்ஸ்க்கு கோலி, யுவராஜ் சிங் ஆதரவு

நீங்கள் இல்லாமல் உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பை இல்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸுக்கு விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உலகக்கோப்பைப் போட்டிக்கா தென் ஆப்பிரிக்க அணி தயாரிக்கொண்டிருந்தபோது, கடந்த 2018-ம் ஆண்டு  மே மாதம் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தார்.இது கிரிக்கெட் உலகையே அதிர்சிக்குள்ளாக்கியது.

அதன்பின் உலகக்கோப்பைப் போட்டியின்போது, தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது. இதைப் பார்த்த டிவில்லியர்ஸ் இப்போது நான் தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்ப தயாராக இருக்கிறேன், என்னை மீண்டும் தேர்வு செய்தால், அணிக்காக விளையாடத் தயார் என்று அறிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், டிவில்யர்ஸ் வேண்டுகோளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

இதனிடையே, டிவில்லியர்ஸ் நேற்று தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்திருந்தார்.அதில், நான் ஓய்வு அறிவித்த தினத்தன்று என்னிடம் தனிப்பட்ட முறையில் உலகக்கோப்பைக்கு வரும் எண்ணமுள்ளதா என்று. நான் உடனேயே ஆமாம் என்றேன். அதன் பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கும் அணிக்கும் எனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை.

அவர்களும் என்னை அழைக்கவில்லை, நானும் அவர்களை அழைக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓரளவுக்கு நல்ல பார்மில் இருக்கிறேன், ஆகவே தேவைப்பட்டால் நான் உலகக்கோப்பையில் ஆடுகிறேன், அதாவது தேவைப்பட்டால் என்றே கூறினேன்.

உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தோற்ற போது நானும், டூப்பிளசியும் பேசிய சொந்த உரையாடல்கள் ஊடகங்களுக்குக் கசிந்து என்னை மோசமானவனாகச் சித்தரித்தது.

இதனையடுத்தே என்னை நியாயமற்ற முறையில் செருக்குப் பிடித்தவன், சுயநலமி,  தீர்மானமற்றவன் என்றெல்லாம்  விமர்சித்தனர். என்னுடைய மனசாட்சி தெளிவாகவே உள்ளது, நேர்மையான காரணங்களுக்காகத்தான் நான் ஓய்வு பெற்றேன். என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் டிவில்லியர்ஸுக்கு ஆர்சிபி அணியின் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், "

என்னுடைய சகோதரரே, எனக்கு தெரிந்தவரை நீங்கள்தான் மிகவும் நேர்மையானவர், அணிக்காக உருக்கமாக விளையாடியவர். ஆனால், துரதிர்ஷ்டமாக உங்களுக்கு இது நடந்து விட்டது. நாங்கள் உங்களை நம்புகிறோம், உங்களுடன் நாங்கள் எப்போதும் துணை இருப்போம்.

உங்களின் அந்தரங்க வாழ்க்கையில் சிலர் நுழைந்து சிக்கலை ஏற்படுத்தியதை  வேதனைக்குரியது. உங்களின் அழகான குடும்பத்துக்கு நீங்கள் இன்னும் அதிக அன்பையும் அதிகாரத்தையும் வழங்குங்கள். நானும் அனுஷ்காவும் எப்போதும் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் " எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் தனது ஆதரவை டிவ்லிலயர்ஸ்க்கு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " என்னுடைய நெருங்கிய நண்பரே, கிரிக்கெட்டின் ஜாம்பவானே, நான் உலக அளவில் கிரிக்கெட் விளையாடியதில் எனக்கு தெரிந்து மிகச்சிறந்த வீரர்களில் நீங்களும் ஒருவர், மனிதர்களில் மிகச்சிறப்பான குணங்களை உடையவர். உலகக் கோப்பையில் நீங்கள் இல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றிவாய்ப்பு ஒருபோதும் இல்லை. இந்த இழப்பு உங்கள் நாட்டுக்குத்தானே தவிர, அணியில் இடம் பெறாத உங்களுக்கானது அல்ல. மிகப்பெரிய  வீரர் அதிகமான விமர்சிக்கப்பட்டுள்ளார். நீங்கள் ஜென்டில்மேன் என்பது அனைவருக்கும் தெரியும் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x