Published : 09 Jul 2019 08:57 AM
Last Updated : 09 Jul 2019 08:57 AM

ஆஷ்லே பார்தி அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்தி 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தி, 55-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஷ்லே பார்தி 6-3, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்ற ஆட்டங்களில் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் 15 வயது மாணவியான அமெரிக்காவின் கோரி காஃப்-ஐயும், 11-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் நவரோவையும், 8-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் 69-ம் நிலை வீரரான போர்ச்சுக்கலின் ஜோவா சோவுசாவையும், 23-ம்

நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 28-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேரையும் வீழ்த்தி கால் இறுதியில் கால் பதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x