Last Updated : 05 Jul, 2019 05:08 PM

 

Published : 05 Jul 2019 05:08 PM
Last Updated : 05 Jul 2019 05:08 PM

இந்தியாவுடன் மீண்டும் மோத நேரிட்டால் அது லீக் போட்டி போல் இருக்காது: கோலி படைக்கு மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் எச்சரிக்கை

உலகக்கோப்பை 2019 இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் என ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க்கின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் காயமடைந்தனர். இதில் ஷான் மார்ஷ் விளையாட முடியாது போக, கிளென் மேக்ஸ்வெல் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்

 

எந்த பவுலரும் தன் சக வீரரைக் காயப்படுத்த வீசுவதில்லை, ஆனால் வலையில் பயிற்சியின் உஷ்ணத்தில் சில வேளைகளில் அவ்வாறு நடந்து விடுகிறது, விஜய் சங்கர் ஓரிருமுறை பும்ராவிடம் அடி வாங்கினார், கடைசியில் பும்ரா யார்க்கரில் பாதம் பொடிபட உலகக்கோப்பையிலிருந்து நடையைக் கட்டினார்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் ஷிகர் தவண் சதத்துடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, தற்போது மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோத நேரிட்டால் அது அந்த லீக் போட்டி போல் இருக்காது என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் எச்சரிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.

 

அதாவது குரூப் ஸ்டேஜில் பெற்ற வெற்றியை ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார் மிட்செல் ஸ்டார்க்.

 

“இந்தியாவுக்கு எதிரான அந்த குரூப் ஸ்டேஜ் ஆட்டத்துக்குப் பிரகே நாங்கள் மிடில் ஓவர்களில் மிகவும் ரெகுலராக எதிரணியினரின் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறோம். அதாவது இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தாக்குதல் பவுலிங் வீசுவோம். எதிலும் திட்டத்தை சரியாகச் செயல்படுத்தினால் முடிவுகள் தானாக வரும், அந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில்தான் கொஞ்சம் கவனமிழந்து விட்டோம்.

 

அதனால் விக்கெட்டுகளை வைத்திருந்த அவர்கள் கடைசியில் அடித்து ஆட முடிந்தது. அந்தப் போட்டிக்குப் பிறகே நாங்கல் மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், நாங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதை அமைதியாக நிறைவேற்றி வருகிறோம், ஆகவே லீக் ஸ்டேஜ் தோல்வியை சீரியஸாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றார் மிட்செல் ஸ்டார்க்

 

ஒருவேளை இந்திய - ஆஸ்திரேலிய இறுதிப் போட்டியாக இருந்தால் அது ஒரு ஷார்ட் பிட்ச் பவுலிங் சோதனைக்களமாக விராட் கோலி படைக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஷார்ட் பிட்ச் பவுலிங் என்றால் ஷார்ட் பிட்ச் போட்டு விக்கெட்டுகளை அதன் மூலமே மட்டும் வீழ்த்துவதல்ல, ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் கொஞ்சம் அச்சுறுத்தி பிறகு ஃபுல் லெந்த் பந்தை 4வது ஸ்டம்ப் லைனில் வீசி இந்திய வீரர்கள் மட்டையைக் கொண்டு அந்தப் பந்தை நோண்டத் தூண்டப்படலாம், இதன் மூலம் எட்ஜ்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்பதும் ஷார்ட் பிட்ச் உத்திதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x