Published : 02 Jul 2019 07:40 AM
Last Updated : 02 Jul 2019 07:40 AM

நிக்கோலஸ் பூரன் சதம் வீணானது; இலங்கையிடம் வீழ்ந்தது மே.இ.தீவுகள்

உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத் தில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத் தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அவிஷ்கா பெர் ணாண்டோ 103 பந்துகளில், 2 சிக்ஸர் கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசினார். கருணாரத்னே 32, குசால் பெரேரா 64, குசால் மெண்டிஸ் 39, ஏஞ் சலோ மேத்யூஸ் 26 ரன்களில் ஆட்டமிழந் தனர். லகிரு திரிமானே 33 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

339 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு கட்டத் தில் 40 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. சுனில் அம்ப்ரிஸ் 5, ஷாய் ஹோப் 5, கிறிஸ் கெயில் 35, சிம்ரன் ஹெட்மையர் 29, பிராத் வெயிட் 8, ஜேசன் ஹோல்டர் 26 ரன்களில் வெளியேறினர்.

கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 95 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் ஆலன் ஜோடி மட்டையை சுழற்றியது. தனஞ் ஜெயா டி சில்வா வீசிய 41-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். இஸ்ரு உதனா வீசிய 43-வது ஓவரில் இரு பவுண்டரிகள் விரட்டிய ஃபேபியன் ஆலன், ரஜிதா வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.

6 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் ஃபேபியன் ஆலன் ரன் அவுட் ஆனார். 32 பந்துகளை சந்தித்த ஃபேபியன் ஆலன், ஒரு சிக்ஸர், 7 பவுண் டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். இதை யடுத்து ஷெல்டன் காட்ரெல் களமிறங்க இதே ஓவரில் சிக்ஸர் ஒன்றை விளா சினார் நிக்கோலஸ் பூரன்.

18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் நிக்கோலஸ் பூரன், மேத்யூஸ் பந்தில் விக்கெட் கீப்பர் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். நிக்கோலஸ் பூரன் 103 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரி களுடன் 118 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நம்பிக்கை தளர்ந்தது. 48-வது ஓவரை வீசிய இஸ்ரு உதனா 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஓஷன் தாமஸ் 1, விக்கெட்டை கைப் பற்றி ஒரு ரன்னை மட்டுமே வழங் கினார். மேத்யூஸ் வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி யால் 3 ரன்களே சேர்க்க முடிந்தது. காட்ரெட் 7, கப்ரியல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இது ஆறு தல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி சார்பில் மலிங்கா 3 விக்கெட்களை கைப்பற்றினார். அரை இறுதி வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரில் 6-வது தோல்வியை சந்தித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x