கிரிக்கெட்டுக்காக நிறைய கொடுத்துவிட்டீர்கள் -தோனி குறித்து கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டுக்காக நிறைய கொடுத்துவிட்டீர்கள் -தோனி குறித்து கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சி
Updated on
1 min read

தோனி நீங்கள் இனி விளையாடுவீர்களா எனத் தெரியவில்லை ஆனால் எல்லாவற்றுக்கும் நன்றி என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜடேஜாவின் அமர்க்களமான ஆட்டம், திருப்பு முனையான தோனியின் ரன் அவுட் ஆகியவற்றால், மான்செஸ்டரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து அணி.

இந்த உலகக் கோப்பை தொடருடன் இந்திய வீரர் தோனி ஓய்வு பெறுவார் என்று பரவலாகக் பேசப்படுகிறது, ஆனால் அதுகுறித்து தோனி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில்,

"  நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா... என்று உறுதியாகத் தெரியவில்லை ஆனால் நன்றி.  நீங்கள் இந்த விளையாட்டுக்காக(கிரிக்கெட்) நிறைய கொடுத்துவிட்டீர்கள். உங்களது அமைதியையும் , சுய நம்பிக்கையையும் எப்போதும் பாராட்டுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in