Last Updated : 05 Jul, 2019 09:16 PM

 

Published : 05 Jul 2019 09:16 PM
Last Updated : 05 Jul 2019 09:16 PM

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என்னிடம் அணி நிர்வாகம் தெளிவுபடுத்தி விட்டது: தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் தன் ரோல் என்ன, தான் என்ன டவுனில் இறங்க வேண்டும், இறங்கி என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்கு அணி நிர்வாகம் தெளிவுபடுத்தி விட்டதாக இந்திய அணியின் தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு திடீரென வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை.

 

இந்நிலையில் அவர் கூறியதாவது:

 

என்னுடைய ரோல் என்ன என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறென், 2வதாக பேட் செய்யும் போது நான் 7ம் நிலையில் இறங்கினால் நான் சூழ்நிலைக்குத் தக்கவாறு என் இன்னிங்சைக் கட்டமைக்க வேண்டும்.

 

முதலில் பேட் செய்தால் நான் இறங்கும் போது தேவைப்படும் ரன் விகிதத்தை உறுதி செய்ய வேண்டும்,  இன்ன இடத்தில்தான் நான் களமிறங்க வேண்டும் என்பதையும், சுழ்நிலையை கணித்து என்னால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் என் ரோல் என்று எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

 

இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஆகவே உத்வேகம் உள்ளது, அவா உள்ளது,  இறங்கி செயல்படுத்த வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக திட்டங்கள் சரிவரச் செல்லவில்லை. ஆனால் வரும் ஆட்டங்களில் என் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

 

இந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் பிட்ச் மந்தமாக இருப்பதால் சில அணிகளுக்கு விரட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது, ஆனால் இந்திய அணி சிறந்த விரட்டல் அணிதான் என்று நான் கருதுகிறேன்

 

உள்ளபடியே கூற வேண்டுமெனில் இந்திய அணியில் நல்ல விரட்டல் வீரர்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றனர்., நாங்கள் இலக்கை விரட்டுவதில் நம்பிக்கையுடன் இருந்து வருகிறோம்.

 

ஒரு அணியாக நாங்கள் நன்றாக இலக்குகளை சேஸ் செய்யக்கூடியவர்கள் என்று நம்புகிறோம், ஏனெனில் பெரும்பாலும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்” என்றார் தினேஷ் கார்த்திக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x