

முத்கல் கமிட்டியின் அறிக்கையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறப்பட்டிருப்பதால் பிசிசிஐ தலைவராக மீண்டும் என்னை நியமிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என். சீனிவாசன்.
முத்கல் கமிட்டியின் அறிக் கைக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் என் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்து முற்றிலும் தவறானவை, அடிப்படை யற்றவை, காழ்ப்புணர்ச்சி கார ணமாக கூறப்பட்டவை என நான் கூறி வந்தது முத்கல் கமிட்டி அளித்த அறிக்கை மூலம் தெளிவாகியிருப்பதாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யின் உரிமையை ரத்து செய்வதற்கு வழிவகுக்கும் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.