Published : 10 Jul 2019 12:19 PM
Last Updated : 10 Jul 2019 12:19 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மழையால் பாதிப்பு: நெட்டிசன்கள் விமர்சனம்

மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்டதால், மீதமுள்ள ஆட்டம் இன்று நடத்தப்படுகிறது.

46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 3.5 ஓவர்கள் இன்று வீசப்பட்டு முடிக்கப்படும். அதன்பின் இந்திய அணி பேட்டிங் தொடரும்.களத்தில் ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் உள்ளனர்.

ஒருவேளை இன்று மழை பெய்யாமல் இருந்தால் இந்திய அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும். மழை இல்லாத பட்சத்தில் வழக்கம்போல் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கிவிடும்.

இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி நாக் அவுட் ஆட்டத்தில் மழை பெய்து ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

அவற்றில் சில பதிவுகள்...

பங்காளி

4 வருசத்துக்கு ஒரு தடவ நடக்கற உலக கோப்பையை இவ்வளவு  மோசமா நடத்தணும் .. மழை இல்லாத நாட்டுல நடத்திருந்தா செமி ஃபைனல்க்கு வந்திருக்கற டீம் லிஸ்டே மாறிருக்கலாம்

மெத்த வீட்டான்

மழை தொந்தரவு தாங்காமல் கோப்பையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு மற்ற நாடுகள் ஓடணும்னு நினைச்சே இங்கிலாந்துல மேட்ச் வச்சிருப்பானுங்க போல !

kumar

மழை இன் இங்கிலாந்து

 

செமி மேட்ச் அப்போ வந்து நின்னேன் பாத்தியா

 

ச.கருணாநிதி

 

25வருச கிரிக்கெட் வாழ்க்கைல  இப்படி ஒரு சம்பவத்த இப்பத்தான் பாக்கேன்.

 

Ᏸᴬㄥᴬ

 

இன்றைக்கும் மழை வரே வாய்ப்பு அதிகம் நம்ம விளையாடமலே ஃபைனல் போகலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x