ரோஹித்துக்கு கேட்சை விட்ட தமிம் இக்பால் : ரோஹித் சர்மா, ராகுல் அரைசதங்கள்; இந்தியா அபாரத் தொடக்கம்

ரோஹித்துக்கு கேட்சை விட்ட தமிம் இக்பால் : ரோஹித் சர்மா, ராகுல் அரைசதங்கள்; இந்தியா அபாரத் தொடக்கம்
Updated on
1 min read

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பையின் 40வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த கோலியின் முடிவை உறுதி செய்யும் வகையில் இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் அபாரமாகத் தொடங்கியுள்ளனர்.

23  ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 147  ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 69 பந்துகளில் 62  ரன்களுடனும், ரோஹித் சர்மா 6  பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 70  பந்துகளில் 81 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வங்கதேச அணி இந்த உலகக்கோப்பையில் தொடக்கக் கூட்டணியை சதக்கூட்டணியாக அனுமதித்தது டாப் அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.  வங்கதேசம் இந்தத் தொடரில் வெற்றி கண்ட போட்டிகளில் தொடக்கக் கூட்டணியை 11 ஓவர்களுக்குள் உடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எல்.ராகுல், மஷ்ரபே மோர்டசா பந்தை மிகப்பிரமாதமாக புல் ஷாட்டில் லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார் அருமையான ஷாட். அதே போல் ரூபல் ஹுசேனை அடித்த நேர் பவுண்டரியும் ராகுலின் அதாரிட்டிக்கு மற்றுமொரு சான்று.

ரோஹித் சர்மா இந்தத் தொடரில் தனது 5வது அரைசதத்தை எடுத்து முடித்தார்.  ஆனால் 5வது ஓவரில் முஸ்தபிசுர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட அது சரியாகச் சிக்காமல் தமிம் இக்பாலுக்கு கேட்ச் ஆகச் சென்றது. அவரும் 15 அடி ஓடி வந்தார். ஆனால் பந்தை பிடித்து விட்டார். மிக மோசமாக விட்டார், இதன் பலனை வங்கதேசம் அனுபவித்து வருகிறது.

முதல் ஓவரிலேயே ஷார்ட் பவுண்டரியை குறிவைத்து மஷ்ரபே மோர்டசா ஷார்ட் பிட்ச் பந்தை ரோஹித் சர்மா சிக்சருக்குத் தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சைபுதின் பந்தை எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் அடித்த சிக்ஸ் அற்புதத்தின் ரகம். பிறகு ஷாகிப் அல் ஹசனின்  பந்தையும் ஷார்ட் பவுண்டரியில் ஒரு சிக்ஸ் அடித்தார் ரோஹித்.

தற்போது இந்திய அணி 147/0 ரோஹித் சர்மா 81 நாட் அவுட், ராகுல் 62 நாட் அவுட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in