Published : 02 Jul 2019 07:42 am

Updated : 02 Jul 2019 07:42 am

 

Published : 02 Jul 2019 07:42 AM
Last Updated : 02 Jul 2019 07:42 AM

வங்கதேசத்துடன் இன்று மோதல்: அரை இறுதி வாய்ப்பை பெறுமா இந்திய அணி?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 11 புள்ளி களுடன் பட்டியலில் 2-வது இடத் தில் தொடர்கிறது. கடைசியாக நேற்றுமுன்தினம் இதே மைதா னத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.


இந்தத் தோல்விக்கான கார ணங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்வதற்கு குறைந்த அள விலான நேரமே உள்ள நிலை யில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தை இன்று எதிர்கொள் கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறன் கொண்ட அனுபவ வீரரான தோனி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய விதம் மீண்டும் ஒரு முறை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதி கட்ட ஓவர்களில் வெற்றிக் கான ரன் விகித தேவை அதிகமாக இருந்தது. ஆனால் தோனி களத் தில் நின்ற போதிலும் கடைசி 5 ஓவர் களில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. தோனியின் மந்தமான ஆட்டம் முன்னெப்போதும் இல்லா ததைவிட அணியின் ஸ்திரத்தன் மையை பாதிப்பதாக உள்ளது.

தோனியுடன் களத்தில் இருந்த கேதார் ஜாதவிடம் இருந்தும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்பட வில்லை. இதனால் இன்றைய ஆட் டத்தில் கேதார் ஜாதவ் நீக்கப்படக் கூடும். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை பயன்படுத்துவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

ஸ்டெம்புகளுக்கு நேராக பந்து களை வீசுவது, பீல்டிங்கில் எந்த இடத்தில் நிறுத்தினாலும் அதி விரைவாக செயல்படுவது மற்றும் பேட்டிங்கில் 6 அல்லது 7-ம் நிலை யில் மட்டையை சுழற்றும் திறனை கொண்டிருப்பதால் இந்தத் தொட ரில் முதன்முறையாக களமிறங் கும் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா பெறக்கூடும். மேலும் எட்ஜ்பாஸ் டன் மைதானத்தின் இடதுபுற பவுண்டரி எல்லையின் தூரம் 60 மீட்டருக்கும் குறைவானது. ரவீந்திர ஜடேஜாவின் தேர்வுக்கு இதுவும் கருத்தில் கொள்ளப்படும்.

இந்தத் தொடரில் முதன் முறை யாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் உயர் மட்ட செயல்திறனை வெளிப்படுத் தத் தவறினர். ரிஸ்ட் ஸ்பின்னர் களான யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரது பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்களான ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வெளுத்து வாங்கினர்.

இவர்கள் பவுண்டரி தூரம் குறைவாக உள்ள மைதானத்தின் இடதுபுற பகுதியை நோக்கி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை சரளமாக மேற் கொண்டு ரன் வேட்டையாடினர். வங்கதேச அணியில் தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஸ் பிகுர் ரகிம், லிட்டன் தாஸ், மஹ்ம துல்லா ரியாத் உள்ளிட்டோர் சுழற் பந்து வீச்சில் சிறப்பாக விளை யாடக்கூடியவர்கள். மேலும் ஆடு களத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் யுவேந்திர சாஹல் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அவர், 10 ஓவர்களை வீசி 88 ரன்களை விட்டுக்கொடுத்து உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் களை வாரிக்கொடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்திருந்தார். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் யுவேந்திர சாஹல் நீக்கப்பட்டு கூடு தலாக ஒரு வேகப்பந்து வீச்சாள ருடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்த வகையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் குமார் மீண்டும் விளையாடும் லெவ னில் இடம் பெறக்கூடும். அவர், களமிறங்கும் பட்சத்தில் அணியின் பின் வரிசை பேட்டிங்கும் வலுப் பெறும். இன்றைய ஆட்டத்தில் இந் திய அணிக்கு சாதகமான விஷயம் என்னவெனில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை போன்று வங்கதேச அணியின் பந்து வீச்சு பலமானது இல்லை என்பதுதான்.

மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியானது எஞ்சி யுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறு திக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. அந்த அணியானது நம்பர் ஒன் ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசனின் பேட்டிங், பந்து வீச்சை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தத் தொடரில் 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவர், பேட்டிங்கில் 2 சதங்களுடன் 476 ரன்கள் வேட்டையாடி உள்ளார். உயர்மட்ட பார்மில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பெரிய அளவிலான இலக்கை கூட துணிவுடன் விரட்டும் திறனை வங்கதேச அணி வளர்த்துக் கொண் டுள்ளது. அதேவேளையில் அந்த அணியின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. கேப்டன் மோர்டசா 6 ஆட் டங்களில் விளையாடி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். மற் றொரு முன்னணி வேகப்பந்து வீச் சாளரான முஸ்டாபிஸூர் ரஹ் மானிடம் இருந்து தாக்கத்தை ஏற் படுத்தக்கூடிய அளவிலான பந்து வீச்சு வெளிப்படவில்லை.

பலவீமான பந்து வீச்சை வங்க தேச அணி கொண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டாஸை வெல்லும் பட்சத்தில் முதலில் பேட்டிங் செய்வதையே இந்திய அணி விரும்பக்கூடும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் எளிதாக அரை இறுதிக்கு முன்னேறும். இல்லை யெனில் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக கட் டாய வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.

வங்கதேசம்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஸ்பிஹூர் ரகிம், லிட்டன் தாஸ், மஹ்மதுல்லா ரியாத், மொகமது மிதுன், சபீர் ரஹ்மான், மொசடக் ஹோசைன், மொகமது சைபுதீன், மெஹிதி ஹசன், ரூபல் ஹோசைன், முஸ்டாபிஸூர் ரஹ்மான், அபு ஜயத்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author