Published : 02 Jul 2019 06:12 PM
Last Updated : 02 Jul 2019 06:12 PM

ஒரே உலகக்கோப்பையில் சதங்களில் சாதனை கண்டார்: முதல் இந்திய வீரராக ரோஹித் சர்மா சாதனை; சங்கக்காரா சாதனை சமன்

2019 உலகக்கோப்பை தொடரில் பிரமாதமான பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா இன்று வங்கதேசத்துக்கு எதிராக 92 பந்துகளில் 104 ரன்களை விளாசி இந்த உலகக்கோப்பையில் 4வது சதத்தை எடுத்து, ஒரே உலகக்கோப்பை தொடரில் 4 சதங்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

 

2015 உலகக்கோப்பையில் இலங்கை வீரர் சங்கக்காரா 4 சதங்களை எடுத்திருந்தார், அந்தச் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்தார், இதை உடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

 

92 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 பிரமாதமான சிக்சர்களுடன் அவர் 104 ரன்களை எடுத்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்றுத் தள்ளி ஆஃப் கட்டரை வீச எக்ஸ்ட்ரா கவர் மீது தூக்கி அடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனார்.

 

இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ரோஹித் சர்மா சதங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடர்களில் 5 சதங்கள் எடுத்து இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வகையில் வார்னரை கடந்துள்ளார்.  தமிம் இக்பால் விட்ட கேட்ச் கைகொடுக்க ரோஹித் சர்மா அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x