

ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று நடைபெறும் போட்டிகளில் இந்தியாவுடன் இலங்கை அணியும், தென் ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகின்றன. இந்த நிலையில் இன்று நடைபெறவிருக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டித்தான் தனது கடைசி போட்டி என்று இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம். நான் தென் ஆப்பிரிக்க அணிக்காக கடைசியாக மைதானத்தில் களமிறங்கும் போட்டி இது. எனது கிரிக்கெட் பயணம் முழுவதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கனவை நனவாக்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.