Published : 06 Nov 2014 11:57 AM
Last Updated : 06 Nov 2014 11:57 AM

ஐசிசி கனவு ஒருநாள் அணி எம்.எஸ்.தோனி கேப்டன்; டெஸ்ட் அணியில் இந்தியர்களுக்கு இடமில்லை

2014-ம் ஆண்டுக்கான ஐசிசி கனவு ஒருநாள் அணியின் கேப்டனாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் இலங்கை கேப்டன் மேத்யூஸ் தலைமையிலான ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.

முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி ஐசிசியின் கனவு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளை அறிவித்துள்ளது. அதன்படி தோனி தலைமையிலான 12 பேர் அடங்கிய ஒருநாள் போட்டி அணியில் இந்தியாவின் விராட் கோலி, முகமது சமி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா 12-வது வீரராக இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து 7-வது ஆண்டாக ஒருநாள் போட்டி அணியில் தோனி இடம்பெற்றுள்ளார். இதேபோல் டெஸ்ட் அணியில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் தொடர்ந்து 7-வது ஆண்டாக இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டி அணி: முகமது ஹபீஸ், குயின்டன் டி காக், விராட் கோலி, ஜார்ஜ் பெய்லி, டிவில்லியர்ஸ், தோனி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டுவைன் பிராவோ, ஜேம்ஸ் ஃபாக்னர், டேல் ஸ்டெயின், முகமது சமி, அஜந்தா மென்டிஸ், ரோஹித் சர்மா.

டெஸ்ட் அணி: டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், குமார் சங்ககாரா, டிவில்லியர்ஸ், ஜோ ரூட், ஏஞ்செலோ மேத்யூஸ் (கேப்டன்), மிட்செல் ஜான்சன், ஸ்டூவர்ட் பிராட், டேல் ஸ்டெயின், ரங்கனா ஹெராத், டிம் சவுதி, ராஸ் டெய்லர் (12-வது வீரர்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x