Last Updated : 18 Aug, 2017 05:37 PM

 

Published : 18 Aug 2017 05:37 PM
Last Updated : 18 Aug 2017 05:37 PM

சிலர் கும்ப்ளேவை கண்டிப்பானவர் என்கிறார்கள்... ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை: விருத்திமான் சஹா

அனில் கும்ப்ளே கண்டிப்பானவரா என்ற கேள்வியை விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ட போது அவர் தான் அப்படி நினைக்கவில்லை என்று பதிலுரைத்தார்.

இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய சஹா கூறியதாவது:

கும்ப்ளே கண்டிப்பானவர் என்று நான் உணரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவர் கண்டிப்பானவராக இருந்துதானே ஆக வேண்டும். சிலர் அவர் கண்டிப்பானவர் என்று கருதுகின்றனர். ஆனால் நான் அப்படி அவரை உணரவில்லை. அனிலின் கீழ் நான் அப்படியாக உணரவில்லை.

அனில் கும்ப்ளே அணி எப்போதும் 400, 500, 600 ரன்களை குவிக்க வேண்டும் என்று கருதுவார். மேலும் எதிரணியினரை 150-200க்குள் சுருட்ட வேண்டும் என்றும் கருதுவார். அது எப்போதும் நடக்காது அல்லவா?

மாறாக ரவி சாஸ்திரி தீவிரத்தை உக்கிரப்படுத்தக் கூறுவார். களத்தில் இறங்கி எதிரணி பந்து வீச்சை மைதானத்துக்கு வெளியே அடிக்க வேண்டும் என்று கருதுபவர் ரவிசாஸ்திரி.

இந்த ஒரு வித்தியாசத்தை இருவரிடமும் கண்டிருக்கிறேன் மற்றபடி இருவருமே நம்பிக்கையூட்டுபவர்கள். ரவி சாஸ்திரி இயக்குநராக இருந்த போது ஆக்ரோஷமாக இருந்தார். இந்த புதிய பொறுப்பில் ரவி இன்னும் ஈடுபாட்டை கூடுதலாகக் காட்டுகிறார்.

கோலி கேப்டன்சி பற்றி...

கோலியும் முன்னேறி வருகிறார். வீரர்களுடனான அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாங்கள் அவருடன் வெளியில் செல்வதுண்டு. அவர் எப்போதும் எங்களுடனேயே இருப்பார். இது அவரது பிளஸ் பாயிண்ட்.

இலங்கை அணி வீரர்களின் பொறுமையின்மை நமக்குச் சாதகமாக அமைந்தது. ஒரு செஷனில் நிலைத்து ஆடுவார்கள், அடுத்த செஷனில் பொறுமை இழந்து விடுவார்கள்.

இவ்வாறு கூறினார் சஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x