Published : 28 Aug 2017 06:40 PM
Last Updated : 28 Aug 2017 06:40 PM

விராட் கோலி கேப்டன்சி பற்றி நிறைய கூறப்படுகிறது..., தெ.ஆ. தொடர் பெரிய சவால்தான்: கிரேம் ஸ்மித்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்குப் பெரிய சவாலாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை என்று முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி நன்றாக ஆடி வருகிறது. விராட் கோலி எப்படி டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறார், அணி வீரர்களுக்கு எப்படி உத்வேகமாகத் திகழ்கிறார் என்பது பற்றியெல்லாம் நிறைய பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது, இங்குள்ள பிட்ச் உள்ளிட்ட நிலைமைகள் நிச்சயம் இந்திய அணிக்கு வித்தியாசமாக இருக்கும்.

இந்திய அணி ஒன்று உள்நாட்டில் ஆடுகின்றனர், இல்லையேல் இலங்கை, மே.இ.தீவுகளில் ஆடுகின்றனர். இங்கெல்லாம் பந்து மெதுவாக வரும். தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பது உறுதி.

ரபாடா, மோர்கெல், பிலாந்தர், கேசவ் மஹராஜ் ஆகியோருக்கு எதிராக இந்திய பேட்ஸ்மென்கள் எப்படி ஆடுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளது. டேல் ஸ்டெய்னும் வந்து விட்டால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு மேலும் வலுவாக மாறிவிடும். இந்தியாவுக்கு எதிராக டேல் ஸ்டெய்ன் நன்றாக ஆடியுள்ளார், அவரது அனுபவம் தென் ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாகக் கைகொடுக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க வேண்டும். பேட்டிங் வரிசை இன்னும் நிலைத்தன்மை பெறவில்லை. தென் ஆப்பிரிக்க அணிச்சேர்க்கை நிச்சயம் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு கூறினார் கிரேம் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x