

ஹாக்கி அணி வீரர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக, ’ஹாக்கி இந்தியா ஆண்டு விருதுகள்’ என்கிற விருதுகள் வழங்கும் நடைமுறையை ஹாக்கி இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபற்றி ஹாக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் (பொது), முஷ்டாக் அஹமது கூறும்போது, “ஒரு பெரிய தாவுதலுக்கு ஹாக்கி இந்தியா தயாராகியுள்ளது.
இது பரிசு பெறும் வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு அவர்களுடைய மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கவும் உதவும். இன்னும் அதிகமாக சாதிக்கும் முனைப்பை ஏற்படுத்தும்.” என்று கூறினார். சமீபத்தில் இறந்த, ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரீந்தர் பத்ராவின் மகனான துருவ்-வின் பெயரில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த வீரருக்கான விருது உள்பட மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத்தொகை - 25 லட்சம் ரூபாய். சமீபத்தில், இந்திய ஹாக்கி அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்த நிலையில் ஹாக்கி இந்தியா இந்த விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.