2-வது ஒருநாள் போட்டி: இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்தது

2-வது ஒருநாள் போட்டி: இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்தது
Updated on
1 min read

அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்துள்ளது.

தில்ஷன் மட்டுமே ஆக்ரோஷம் காண்பித்து அஸ்வினின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் நீடிக்கவில்லை 30 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த தில்ஷன், அக்‌ஷர் படேல் வீசிய பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆகி வெளியேறினார்.

உமேஷ் யாதவ் முதல் ஓவரிலேயே பெரேராவை வீழ்த்தினார். அந்த பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி உள்ளே ஸ்விங் ஆனது. அதாவது அவுட்ஸ்விங்கர் லெக் ஸ்டம்பிலிருந்து உள்ளே ஸ்விங் ஆனது. அவர் பிளிக் செய்ய முயன்று தோல்வியடைந்தார். பெரேரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

4 ரன்கள் எடுத்த ஜெயவர்தனே அஸ்வின் பந்தை நேராக ராயுடுவிடம் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

தற்போது சங்கக்காரா 22 ரன்களுடனும், மேத்யூஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in