Last Updated : 10 Aug, 2017 09:40 PM

 

Published : 10 Aug 2017 09:40 PM
Last Updated : 10 Aug 2017 09:40 PM

ஒருநாள் போட்டிகளுக்கு அஸ்வின், ஜடேஜா, ஷமிக்கு ஓய்வு? சாஹல், குருணல் பாண்டியாவுக்கு வாய்ப்பு

ஸ்பின்னர்களின் பணிச்சுமை காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 13-ம் தேதி இந்திய ஒருநாள் தொடருக்கான அணி தேர்வு செய்யப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கண்டியிலும் இவரது சக தேர்வாளர் தேவங் காந்தி தென் ஆப்பிரிக்காவில் இந்தியா ஏ அணியினரின் ஆட்டத்தையும் கவனித்து வருகின்றனர்.

நடப்பு டெஸ்ட் தொடரில் ஜடேஜாவும் அஸ்வினும் 108 ஓவர்களை வீசியுள்ளனர். ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சுமையை தனியே ஏற்க வேண்டும், இதனையடுத்து அவர் 150 ஓவர்களையும் தாண்டி வீச வேண்டி வரலாம். ஆகவே பணிச்சுமை காரணமாக ஒருநாள் தொடரில் அஸ்வின் ஆடுவது கடினம் என்றே தெரிகிறது.

இதனையடுத்து ஆர்சிபி லெக்ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல், அக்சர் படேல், ஆல் ரவுண்டரி குருணால் பாண்டியா ஆகியோருக்கு அணியில் இடம்பெற பிரகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆகிய அணிகளுடன் ஒருநாள் தொடர்களில் ஆடவுள்ள நிலையில் இலங்கை அணி இந்த ஆண்டு இறுதியில் முழு தொடரில் ஆடுகிறது. புத்தாண்டில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது, பிறகு இலங்கையில் சுதந்திரா கோப்பையில் விளையாடுகிறது. பிறகு 2018 ஐபிஎல் தொடங்குகிறது.

ஆனால் பணிச்சுமை காரணமாக தனக்கு ஓய்வு வேண்டும் என்று விராட் கோலி கேட்கவில்லை ஆடி சராசரியை உயர்த்திக் கொள்வதில் னைப்பாக இருக்கிறார் என்று தெரிகிறது.

ஆனால் அவர் இடைவெளியில்லாமல் ஆடிவருவதால் அவருக்கும் மாற்றை தேர்வுக்குழுவினர் யோசிக்க வாய்ப்புள்ளது. என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x