Last Updated : 21 Aug, 2017 06:56 PM

 

Published : 21 Aug 2017 06:56 PM
Last Updated : 21 Aug 2017 06:56 PM

கடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள்

தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கையைப் பந்தாடிய போட்டியில் சில சாதனைகள் நிகழ்ந்துள்ளன.

ஷிகர் தவண் தன் சொந்த சாதனையாக 71 பந்துகளில் சதமெடுத்து குறைந்த பந்துகளில் சதம் எடுத்தார். இதற்கு முன்னர் இவர் மே.இ.தீவுகளுக்கு எதிராக 2013-ல் கான்பூரில் சதமெடுத்த போது 73 பந்துகளில் எடுத்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

ஷிகர் தவணின் 132 நாட் அவுட், அவரது 2வது அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கையாகும், முன்னதாக 2015 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த மறக்க முடியாத 137 ரன்கள்தான் அவரது அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாகும்.

கடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் ஸ்கோர்: 85 நாட் அவுட், 154 நாட் அவுட், 122, 76 நாட் அவுட், 96 நாட் அவுட், 111 நாட் அவுட், 82 நாட் அவுட், மேலும் ஒரேயொரு முறைதான் அவர் அவுட் ஆகியுள்ளார். சராசரி 726 ரன்கள்.

127 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி வென்றது, 200 அல்லது அதற்கும் அதிகமான இலக்கை விரட்டும் போது, பெரிய இடைவெளியில் பெற்ற 4வது வெற்றியாகும்.

தவணும், கோலியும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 197 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தது இலங்கை மண்ணில் 2-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டணியாகும்.

தவண் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக தனது 6-வது 50+ ஸ்கோரை எடுத்தார்.

அக்சர் படேல் எடுத்த 3/34 அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x